ஸ்ருதிஹாசன் போட்ட வீடியோ… 12லட்சம் பார்வையாளர்களுடன் செம வைரல்!!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதி ஹாசன். தந்தை புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், தனக்கான சினிமாப் பயணத்தை சிபாரிசு இல்லாமல் தானே அமைத்துக் கொண்டார் ஸ்ருதி ஹாசன்.

இவர் ஹே ராம் என்னும் இந்தி படத்தில் 2000 ஆம் ஆண்டில் கால் பதித்து இருந்தாலும், தமிழில் இவர் 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின்னர் 3, பூஜை, புலி, வேதாளம் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலே அதிக அளவில் ஜொலித்த ஸ்ருதிஹாசன் படத்தினைவிட பாட்டுப் பாடுதல், இசையமைத்தல் போன்றவற்றிலே ஆர்வம் கொண்டவர்.

00d95787160aada80fdfd480b43ef9bb-1

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார்.

View this post on Instagram

2020 so far

A post shared by @ shrutzhaasan on

தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு நகைச்சுவை ததும்பும் ஒரு வீடியோவினைப் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்று வருகிறார். அதாவது அந்த வீடியோவில், “ஊரடங்கு நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதற்கு பதிலாக குக்… குக்… குக்…என சினிமாப் பாடலை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...