Connect with us

அதிமுக எம்எல்ஏ மனைவி மகளுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

செய்திகள்

அதிமுக எம்எல்ஏ மனைவி மகளுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ பழனியின் குடும்பத்தினருக்கும் சமீபத்தில் கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் அவருடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

இதனை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக எம்எல்ஏ குடும்பமே குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top