Connect with us

தோனியின் ஓய்வு குறித்து கூறிய ஸ்ரீனிவாசன்!!

விளையாட்டு

தோனியின் ஓய்வு குறித்து கூறிய ஸ்ரீனிவாசன்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தினைப் பிடித்தவர் தோனி.

இவர் கேப்டனாக இருந்து இந்திய அணியினை சிறப்பாக வழி நடத்தியுள்ளார், தற்போது உலகக் கோப்பை போட்டியிலிருந்து இவருடைய ஆட்டம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

அதனையடுத்து தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணமே இருந்தன. அதன்பின்னர், இரண்டு மாதம் ஓய்வு காலம் விடுப்பு எடுத்ததால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி சார்பில் தோனி விளையாடவில்லை.

தோனியின் ஓய்வு குறித்து அவரும் வாய் திறக்கவில்லை, மறுபுறம் பிசிசிஐயும் எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை.

தற்போது இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஐபிஎல் தொடரில் தோனியின் நிலைகுறித்து கூறியுள்ளார், அதாவது, “தோனி ஓய்வு பெறுவது எந்தவித அதிகாரப் பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் வரவுள்ள ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக தோனிதான் என்பது மட்டும் உறுதியளிக்கிறேன்” என்றார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top