மக்களின் ஆதரவைப் பெற்ற இலங்கைப் பெண் லொஸ்லியா

பிக்பாஸ் பாகம் 3 ஞாயிற்றுக்கிழமை இனிதே அரங்கேறியது, மக்கள் எதிர்பார்ப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாத வித்தியாசமான போட்டியாளர்கள் இந்தமுறை பங்குபெற்றுள்ளனர்.

பரிச்சயமில்லாத முகங்களை எப்படிப் பார்ப்பது என்று நிலவிய கேள்வி, போட்டி ஆரம்பித்த 2 வது நாளே காணாமல் போய்விட்டது. ஆரம்பித்த 2 வது நாளிலேயே பல சுவாரஸ்சியத்தைக் கூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளன.

அபிராமி- கவினின் காதல், சாக்‌ஷியின் கோபம், மோகன் வைத்தியாவின் கண்ணீர், அபிராமியும் சாக்‌ஷியின் புரளி, இலங்கைப் பெண் லொஸ்லியா புறக்கணிக்கப்படுதல் என்று 2 வது நாளே ரசிகர்களை இருக்கை நுனியில் உட்காரவைத்துவிட்டது பிக்பாஸ் 3.

மக்களின் ஆதரவைப் பெற்ற இலங்கைப் பெண் லொஸ்ஸியா

15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் புதிய நபராக மீரா மிதுன் மாடலிங் நேற்று நுழைந்தார். மீரா மிதுன் உள்ளே வந்ததும் அபிராமியும் சாக்‌ஷியும் புரளி பேச ஆரம்பித்தனர்.

இதன்மூலம் 3 பேராக இருந்த கூட்டணி 2 பேருடன் மிக வலுவாக உள்ளது, லொஸ்லியா புரளி பேசும்போது விலக்கியே வைக்கப்பட்டார், அவர் வந்ததும் அபிராமியும் சாக்‌ஷியும் ஒதுக்கிவிட்டு புறணி பேசினர்.

ஆரம்பித்த 2 வது நாளே இலங்கைப் பெண் புறக்கணிக்கப்பட்டது சிறிது வருத்தத்தை அளித்தாலும், அவருக்கு மக்களிடம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.