இவ்ளோ நாள் எங்க போனீங்க மலிங்கா…. மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்

லீட்ஸ்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மாத்யூஸ் இல்லான்னா இது சாத்தியம் இல்லை:

இலங்கை அணியில் பெர்னாண்டோ 49 ரன்னும், குசல் மெண்டிஸ் 46 ரன்னும் , மாத்யூஸ் 85 ரன்னும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிர்ச்சியளித்த இங்கிலாந்து:

இவ்ளோ நாள் எங்க போனீங்க மலிங்கா…. மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்


இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் ‘டக்’ அவுட் ஆனது  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வின்ஸ் 14 ரன் வரை மட்டுமே தாக்குப்பிடித்தார். ஜோ ரூட் 57 ரன்னில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆட்டமிழந்தார்.

தொடர் விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா:
கேப்டன் மார்கன் 21 ரன்னிலும், பட்லர் 10 ரன்னிலும், மொயின் அலி 16 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் திரும்பியது பேரதிர்ச்சியே ஆகும். ஸ்டோக்ஸ்  மட்டுமே அணியை தூக்கி நிறுத்த போராடினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 47 ஓவரில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


ரெக்கார்டு பிரேக் செய்த இலங்கை:
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றியை இலங்கை அணி தொடர்ந்து பெற்று வருகிறது. 1975 முதல் 1992 உலகக்கோப்பை வரை இங்கிலாந்து அணியே அதிக போட்டிகள் வென்று இலங்கையை கைக்குள் வைத்திருந்தது.

 1996 முதல் 2019 உலகக்கோப்பை வரையில் இலங்கை அணி 5 போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. நிலைமை அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது.

மலிங்கா 50 விக்கெட்டுகள்:
இப்போட்டியில் 4 விக்கெட்டை வீழ்த்தி இலங்கையை ஜெயிக்க வைத்த பெருமை மலிங்காவையே சாரும், இந்த  உலகக்கோப்பையுடன் சேர்த்து தனது 50வது விக்கெட்டை உலகக்கோப்பையில் கைப்பற்றியுள்ளார்.