Connect with us

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்தன.


4-வது நாளான நேற்று நியூசிலாந்தின் கடைசி கட்ட வீரர்கள் கடுமையாக போராடினர். வாட்லிங் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிரென்ட் பவுல்ட் 26 ரன்களும், அஜாஸ் பட்டேல் 14 ரன்களும் எடுத்தனர்.

சோமர்வில்லி 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். நியூசிலாந்து அணி 106 ஓவர்களில் 285 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி


268 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடத் துவங்கியது. இலங்கை அணியின் 2-வது இன்னிங்சை கேப்டன் கருணாரத்னேவும், திரிமன்னேவும் ஆடினர்.


இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 71 ரன்களுடனும், திரிமன்னே 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது இலங்கை அணி. மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அறிவிப்புகள் வெளியானதால், ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top