Connect with us

நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்.பி.பி, ஜேசுதாஸ்,இளையராஜா இணைந்த வைபவம்

பொழுதுபோக்கு

நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்.பி.பி, ஜேசுதாஸ்,இளையராஜா இணைந்த வைபவம்

இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று அதனால் நேற்று சென்னையில் ஈவிபி மைதானத்தில் ஒரு இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. இதில் இளையராஜாவின் நெருங்கிய நண்பரான எஸ்.பி.பி இளையராஜாவுடன் இணைந்து பாடினார்.

எஸ்.பி.பிக்கும் இளையராஜாவுக்கும் இடையே இருந்த மனவருத்தம் இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கியது.

இதே போல் ஒரு காலத்தில் இளையராஜாவின் இசையில் பெரும்பாடல்களை பாடிய கே.ஜே ஜேசுதாஸ் சமீப காலங்களாக பாடுவதில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் இளையராஜா இசையமைக்கும் தமிழரசன் படத்தில் கே.ஜே ஜேசுதாஸ் ஒரு பாடல் பாடுகிறார். அதே போல் எஸ்.பி.பியும் இப்படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.

நேற்று நடந்த ஈவிபி மைதான நிகழ்ச்சியில் எஸ்.பி.பி, கேஜே ஜேசுதாஸ் இணைந்து தளபதி படப்பாடலை பாடி சிறப்பித்தனர்.

மூன்று இசையுலக ஜாம்பவான்களும் நீண்ட நாட்கள் கழித்து திரைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்பது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top