பொள்ளாச்சி விவகாரம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் கண்டனம்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை பாலியல் ரீதியாக மயக்கி பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று வீடியோ எடுத்த விவகாரம் தமிழ் நாட்டில் மிக பரபரப்பான விவாதமாக சமூக வலைதளங்களில் விவாதங்களில் பார்க்க முடிகிறது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திரைப்பட நடிகர்கள் பார்த்திபன், சத்யராஜ்,சித்தார்த், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் இதற்கு வருத்தம், கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமும் இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் ரமேஷ்கண்ணா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.