Connect with us

தென்னாப்பிரிக்கா அபாரம்: இரண்டாவது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

செய்திகள்

தென்னாப்பிரிக்கா அபாரம்: இரண்டாவது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், முதல் டி-20 போட்டியிலும் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா அணி, நேற்று சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற தென்னப்பிரிக்க அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோர் விரைவில் விக்கெட்டுக்களை இழந்தாலும் மணிஷ் பாண்டே 79 ரன்களும், தோனி 52 ரன்களும் எடுத்ததனர்.

189 ரன்கள் என்ற இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 18.4 ஓவர்களீல் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டி-20 போட்டி வரும் 24ஆம் தேதி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top