தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து

சவுதாம்ப்டன்:

தென்னாப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 10 ம் தேதி நேற்று மாலை 3.00 மணி அளவில் ரோஸ் பவுலில் உள்ள சவுதாம்ப்டனில்  நடைபெற்றது.

இரு அணிகளின் கடந்த கால வரலாறு:

இதுவரை நடந்த ஆட்டங்களில் தென்னாப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிர் எதிராக  6 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா 4 முறை வெற்றி பெற்றுள்ளது, வெஸ்ட் இண்டீஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிர் எதிராக 61 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா 44 முறை வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 15 முறை வெற்றி பெற்றுள்ளது. 2 முறை ரத்து செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து

தென்னாப்ரிக்காவிற்கான நெருக்கடி:

தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த தென்னாப்ரிக்கா தொடரில் தொடர்ந்து ஆட வேண்டுமெனில், தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற வேண்டும்.

தென்னாப்ரிக்கா பேட்டிங்க்:

தென்னாப்பிரிக்க அணியின்  தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் அம்லா களமிறங்கினர். இதில் அம்லா 6 ரன்னிலும், அதன் பின் களமிறங்கிய மார்க்ராம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தென்னாப்பிரிக்க அணியில் குயின்டான் டி காக், டு பிளிஸ்சிஸ்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மோசமான வானிலை:

தென்னாப்பிரிக்க அணி 7.3 ஓவர்களில் 29 ரன்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பின்னர் நடத்தப்படும் என்று கூறி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆட்டம் ரத்து:

வானிலை சரியானதும் நடத்தவிருந்த ஆட்டம், மோசமான வானிலை தொடர்ந்ததனால், இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

களமிறங்கவிருந்த அணிவீரர்கள்:

தென்னாப்ரிக்கா அணி விவரம்:

குவின்டன் டி காக், ஹஷிம் அம்லா, ஃபாஃப் டூ பிளெசிஸ், ரஸ்ஸி வான் டெர் டஸன், ஜீன்-பால் டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவே,
கிக்சோ ரபாடா, டேல் ஸ்டெயின், லுங்கி நேடி, இம்ரான் தாஹிர், டிவைன் ப்ரோட்டோரியஸ், ஐடன் மார்க்ராம், தாபராஸ் ஷம்ஸி, கிறிஸ் மோரிஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

கிறிஸ் கெய்ல், ஷை ஹோப், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்,  எவின் லெவிஸ், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், ஷானோன் கேப்ரியல்.