முடி வெடிப்பினை சரிசெய்ய சில டிப்ஸ்!!

முடி உடைவது, வறண்டு போவது, நுனி முடி பிளவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் தோன்றி முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முடி வளர்ச்சியை பாதிக்கும்.

கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் ஒரு பொக்கிஷமாக இருப்பது வாழைப்பழம். பொட்டாசியம், வைட்டமின் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்றவற்றின் ஆதாரமாக இருப்பது வாழைப்பழம். இதனால் உங்கள் கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, கூந்தலை எளிய முறையில் நிர்வகிக்க உதவுகிறது.மேலும் கூடுதலாக, வாழைப்பழம், கூந்தலின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி, முடி உடைவது மற்றும் நுனி முடி பிளவு போன்ற சேதங்களைத் தடுக்கிறது.

c571dddd9032b5c0e6b99cfea2497b59-1

இது மட்டுமில்லாமல், வாழைப்பழம் உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கச் செய்து , புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாற உதவுகிறது.

மூலப்பொருட்கள்

. ஒரு வாழைப்பழம் நன்றாகப் பழுத்தது

. இரண்டு ஸ்பூன் தேன்

செய்முறை

1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

2. இந்த வாழைப்பழத்தில் தேனைக் கலந்து, இரண்டையும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.

3. இந்தக் கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.

4. இந்தக் கலவை உங்கள் கூந்தலில் அரை மணி நேரம் ஊறட்டும்.

5. பிறகு தலையை அலசவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...