Connect with us

ஸ்மார்ட்போன், இண்டர்நெட்டே பாலியல் குற்றங்களுக்கு காரணம்- விவேக்

பொழுதுபோக்கு

ஸ்மார்ட்போன், இண்டர்நெட்டே பாலியல் குற்றங்களுக்கு காரணம்- விவேக்

சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்கள் மீது மட்டும் இருந்த பாலியல் ரீதியான குற்றங்கள் சிறு குழந்தைகளை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் வரை வளர்ந்து விட்டது.

இது கவலையளிக்க கூடிய விசயமாகும்.இவ்விசயம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசியுள்ள நடிகர் விவேக், ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட்டே பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது இது போல நிகழ்வுகளே பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவில் பேசிய விவேக், தனி மனிதன் ஒவ்வொருத்தனும் ஒரு மீடியாவாக ஆகி விட்டார்கள். ஸ்மார்ட் போன் வச்சிருக்குறவங்க சின்னஞ்சிறு சிறுவர்கள் முதற்கொண்டு தன் வயதுக்கு மீறி எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

விவேகானந்தர் காலத்தில் இருந்த இளைஞர்கள் தன் பெண்களை தாயாக வணங்கினர் என விவேக் கூறியுள்ளார்.

பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு செல்போனில் கேமரா வைத்ததும் நெட் வைத்ததும் தான் என்று விவேக் கூறினார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top