Connect with us

ஏன் துண்டுச்சீட்டை பார்த்து பேசுகிறேன் – ஸ்டாலின் தன்னிலை விளக்கம்

பொழுதுபோக்கு

ஏன் துண்டுச்சீட்டை பார்த்து பேசுகிறேன் – ஸ்டாலின் தன்னிலை விளக்கம்

திமுக தலைவர் எங்கு சென்றாலும் துண்டுச்சீட்டை பார்த்துதான் பேசுகிறார் என ஒரு பேச்சு உள்ளது. சமூக வலைதளங்களில் துண்டு சீட்டு வைத்து பேசியதால் உருவான மீம்ஸ்கள் ஏராளம்.

நீண்ட நாட்களாகவே ஸ்டாலின் துண்டு சீட்டை வைத்துதான் மேடையில் பேசி வருகிறார். அதாவது தான் பேச வேண்டியதை குறிப்பெடுத்து வைத்துதான் ஸ்டாலின் பேசினாலும் அதிலும் தவறாக பேசுகிறார் என்று மீம்ஸ்கள் உலா வந்தது.

இந்நிலையில் துண்டு சீட்டு குறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

துண்டு சீட்டு வைத்து பேசும்போது அதை கேலி செய்யும் பாஜக உட்பட அனைவரையும் சொல்லி பேசியுள்ள ஸ்டாலின்,அது அவர்களின் தரத்தை குறிக்கிறது. ஆதாரத்தோடும் புள்ளி விவரங்களோடும் பேச வேண்டுமானால் துண்டு சீட்டு வைத்துதான் பேச முடியும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top