எஸ்.ஜே சூர்யா நடிக்கும் படத்தில் அமிதாப் இல்லையா

எஸ்.ஜே சூர்யா தற்போது பிரியா பவானி சங்கருடன் இணைந்து மான்ஸ்டர் என்றொரு படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான எலிப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்து நல்லதொரு வெற்றியை தரும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் மச்சக்காரன், கள்வனின் காதலி உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ்வாணன் எஸ்.ஜே சூர்யா மற்றும் அமிதாப்பை வைத்து உயர்ந்த மனிதன் படத்தை இயக்குவதாக இருந்தது.

அமிதாப்பும் எஸ்.ஜேசூர்யா இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையங்களில் வந்தது. இந்நிலையில் அமிதாப்புக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் அமிதாப் நடிக்கவில்லையாம்.

இந்நிலையில் எஸ்.ஜே சூர்யாவும், தமிழ்வாணனும் நேரில் சென்று அமிதாப்பை சந்தித்து தயாரிப்பு நிறுவன பிரச்சினையில் சமரசப்படுத்தி நடிக்க அழைக்க இருக்கின்றனராம்.