சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை இதுதான்…

d56ad7a124d288412b7cd4ffc64f6f3f

மாசி மாதத்தில் ஏராளமான ஆன்மீக நிகழ்வுகள் உண்டு. அதில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி தினம் ஆகும். சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒருவேளை சைவ உணவு உண்டு, காமம், பொய், திருட்டு தவிர்த்து மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். மறுநாள்  சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின்போது சூரிய பகாவானை வணங்கிய பின்பு, அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று  சிவபெருமானை வணங்க வேண்டும். கோயிலில் வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், பூஜையறையில் சிவராத்திரி பூஜை செய்வதற்கான இடத்தைச் நன்கு  சுத்தம் செய்து, பூமாலைகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

f6e176139369c1be6af0ba71b93f1fdf-1

  நண்பகலில் மீண்டும் நீராடி, அவரவர் இல்லத்திலேயே சிவபெருமானுக்கு உச்சிக்கால பூஜைகளை முடிக்கவேண்டும். பின்பு வீட்டருகில் இருக்கும் கோயிலுக்கு  சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்கான மலர்கள், பழங்கள், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் இதர பூஜை பொருட்களை தந்து விட்டு மீண்டும்  வீடு திரும்ப வேண்டும். மறுபடியும் மாலை நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, முன்பு பூஜையறையில் சுத்தம் செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த  பீடத்தில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து முன்னிரவு தொடங்கி நான்கு ஜாமங்களிலும் சிவ மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய  வேண்டும்.  நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை சிவ லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.  திரிகரண சுத்தி மற்றும் ஆச்சாரமாக இத்தகைய சிவ பூஜைகளை செய்ய இயலாதவர்கள். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துக்கொண்டு,  சிவனை வழிபட்டு சிவனருள் பெறலாம்.  அன்று இரவு முழுவதும் சில சிவன் கோயில்களில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் மாதிரியான சிவன் சம்பந்தப்பட்ட பாடல்கள் பாடப்படும். அதை மனதார உள்வாங்கி, இறைவனை தியானிக்கவேண்டும். இப்படி செய்தால் மறுபிறப்பு இல்லாத முக்தி அடையலாம். இந்த பலன் நமக்கு மட்டுமல்லாது நமக்குபின் வரும் 21 தலைமுறைகளும் பலன்பெறும்..

ஓம் நமச்சிவாய!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews