அதிர வைக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை டீசர்

இயக்குனர் சசி இயக்கத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் தயாராகியுள்ளது. ஆரம்ப கால படங்களான சொல்லாமலே, ரோஜாக்கூட்டம் காலத்தில் இருந்து இதற்கு முன் வந்த பிச்சைக்காரன் படம் வரை மக்களின் கவனம் ஈர்த்து வருகிறார் இயக்குனர் சசி .

சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படமும் வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடித்துள்ள இப்படத்தில் சித்தார்த் டிராபிக் இன்ஸ்பெக்டராகவும், ஜிவி பிரகாஷ் ரோட்டில் பைக் ரேஸ் விடும் சேட்டை வாலிபராகவும் நடித்துள்ளார்.

நேர்மையான சித்தார்த்துக்கும் துடுக்குத்தனம் நிறைந்த ஜிவி பிரகாஷுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே கதை ஆகும்.

இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.