சிவனின் பூர்வீகம் எது?!திருவெம்பாவை பாடலும், விளக்கம் 10


2e99e8b9b1ff90e2e3a163727b4d48c8

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்
போதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழந் தொண்டருளன்
கோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன் பேர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்

பொருள்…

சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற் பணிப்பெண்களே!
அரியும் அயனும் அடிமுடி காணமுடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக எம்பெருமான் நின்ற எம்பெருமானின் வீரக்கழலணிந்த திருவடி மலர்ப்பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.
அவன் மாதொருபாகன், மங்கைகூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.
அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?

விளக்கம்

முன்புலாம் கோவில் பணிகளில் பெண்களும் உண்டு. ஆடல், பாடல் செய்யும் பொதுமகளிரும், மாலை தொடுக்க, சமையல், சுத்தம் செய்யன்னு மற்றொரு பிரிவினர் மகளிரும் இருப்பாங்க. ஆனாலும்,கோவிலிலேயே நாள்முழுக்க இருந்து, உபநயனம், ஆன்மீக சொற்பொழிவு, கதாகாலட்சேபம்ன்னு கேட்டு இருந்தாலும், அவங்களுக்கும் விஷ்ண்வும், பிரம்மாவும் அடிமுடி காண முயற்சி செய்து  தோற்றபோது ஜோதிவடிவாய் ஓங்கி நின்ற சிவபெருமானின் ஊர் எது?! பேர் எது?!  குலம் , குணமெதுன்னு தெரியாது, அவர்களுக்கு மட்டுமில்ல, ஆன்மீகத்தில் கரைக்கண்டவர்கள் மட்டுமில்லாம, தேவலோகத்திலிருக்கும் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் உட்பட யாருக்குமே தெரியாது என இந்த பாடல் இருக்கிறது.

 

திருவெம்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews