சிவன் பார்வதியின் சொந்த ஊர் எது

சிவன் பார்வதி இருவருக்கும் சொந்த ஊர் திரு உத்திரகோசமங்கை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு.

275460e60e5460422fb50a9398703884

பல கோவில்களுக்கு மூவாயிரம் ஆண்டு நாலாயிரம் ஆண்டு பழமை எல்லாம் இருக்கும் இந்தகோவில் மண் தோன்றியபோதே தோன்றிய அற்புதக்கோவில். உலகின் முதல் சிவனாலயம் இந்த உத்திரகோசமங்கை ஆகும்.

எத்தனையோ யுகங்களுக்கு முன் தோன்றியது இக்கோவில். இங்குள்ள ஸ்தல விருட்சம் இலந்தை மரத்துக்கே மூவாயிரம் வயது ஆகிறது அந்த அளவு பழமையானது இந்தக்கோவில்.

மாணிக்க வாசகரின் இரு பிறவிகள் சம்பந்தப்பட்டது இந்த உத்திரகோசமங்கை கோவில்.

ஆசியாவிலேயே உயரமான மரகத நடராஜர் இங்குதான் உள்ளார். சிதம்பரத்துக்கு முந்தைய ஸ்தலம் என்பதால் இது ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதியும் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவிதமான முனிவர்கள், சித்தர்கள் வணங்கி அருள்பெற்ற ஸ்தலம் இந்த உத்திரகோசமங்கை.

உலகில் உள்ள அனைத்து சிவனாலயங்களிலும் இரவு பள்ளியறை பூஜை மாணிக்கவாசகர் இயற்றிய உத்திரகோசமங்கை பாடலை வைத்துதான் செய்யப்படுகிறது.

இதை பற்றி உத்திரகோசமங்கை ஓதுவார் விஜயமுருகன் தரும் விளக்கம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.