நடிகர்கள் பாடும் பாடல் குறித்து ரஹ்மான் கருத்து

அந்தக்காலத்தில் தியாகராஜ பாகவதர் நடித்து கொண்டே பாடினார் அவரது பாடல்கள் இன்று வரை அழியாப்புகழோடு விளங்குகிறது.

பின்பு கமல்ஹாசன் தனது பாடல்களில் பாடினார் கமலஹாசன் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலேயே அவள் அப்படித்தான், ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.

பேர் சொல்லும் பிள்ளை படத்தில் வரும் அம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி பாடல் புகழ் பெற்றது.

இதே போல் சிம்புவும் தனது ஆரம்ப காலம் முதல் பாடியும் வருகிறார். கமலும், சிம்புவும் மற்ற நடிகர்களுக்கும் பாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஹ்மான் நடிகர்கள் பாடுவது குறித்து ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது நடிகர்கள் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிப்பதற்கும் நேரம் இல்லை. இந்த நிலையில் பாடலுக்கு பயிற்சி எடுப்பது என்பது சிரமம்தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்து விட்டு பாடல்களை பாட வந்தால் அவர்களது படங்களில் அவர்களே பாடுவது சிறப்பானதாக இருக்கும்.” இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.