பாடல் பாடி வாக்காளர்களை கவரும் பாடகர் மனோ

பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் பாடகர் மனோ. மதுரை மரிக்கொழுந்து வாசம், தேன் மொழி எந்தன் தேன்மொழி போன்ற பாடல்கள் மனோவின் திரையுலக பயணத்துக்கும் முன்னேற்றத்துக்கும் உயர்வாக அமைந்தன.

நாகூர் என்ற பெயரை இசைஞானி இளையராஜா படத்துக்காக மனோ என்று மாற்றியமைத்தார்.

சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்திருக்கும் மனோ திடீரென அரசியல் களத்திலும் குதித்து விட்டார்.

அமமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மனோ அமமுகவிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அமமுக சார்பாக ஓசூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து அவர் ஓசூர் நகர்ப்பகுதிகளில் பல்வேறு விதமான சினிமா பாடல்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடி பிரச்சாரம் செய்தார்.