Connect with us

திருமணம் நடந்ததாக சொல்வது தவறு- சிம்பு

பொழுதுபோக்கு

திருமணம் நடந்ததாக சொல்வது தவறு- சிம்பு

கடந்த 2001ல் வந்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமான சிம்பு தன் முதல் படத்தில் நடித்ததில் இருந்தே பத்திரிக்கையாளர்களுக்கு பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சம் வைத்ததில்லை. ஏதாவது ஒரு கண்டண்ட் கொடுத்துக்கிட்டே இருப்பார்.

கடந்த சில வருடங்களில் சிம்புவை பற்றி வந்த சர்ச்சைகள்

நயன் தாராவுடன் காதல்

நயன் தாராவுடன் காதல் முறிவு

இது நம்ம ஆளு படத்தின் இயக்குனர் பாண்டிராஜுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதால் படம் வெளிவருவதில் சிக்கல்

பீஃப் சாங் பாடியது

ஹன்சிகாவை காதலித்தது

ஹன்சிகாவின் காதல் முறிந்தது

போதைக்கு அடிமையாகி விட்டார் என்ற வதந்தி

கிறித்த மதத்துக்கு மாறி விட்டார் என்ற செய்தி

அந்த வரிசையில் புதிதாக வந்ததுதான் சிம்புவுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது என்று வந்த செய்தி. இதை சிம்பு மறுத்துள்ளார்.

திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். என கூறியுள்ளார்

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top