சிம்பு தேவன் இயக்கும் கசடதபற

இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். இவர் மிக சிறப்பாக இப்படத்தை இயக்கி இருந்தார். அந்தக்காலத்தில் புத்தகங்களில் படிக்கும் துணுக்குகளை கோர்த்து ஒரு நகைச்சுவை படமாக இயக்கி இருந்தார்.

வடிவேலுவின் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது இப்படம். அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட இவரின் கெளபாய் படங்கள் எல்லாமே வித்தியாசமான படங்கள்தான்.

இவர் தற்போது வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் ப்ளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக கசடதபற என்ற படத்தை இயக்குகிறார்.