Connect with us

சித்தார்த்தை கண்டித்த ஹெச்.ராஜா

செய்திகள்

சித்தார்த்தை கண்டித்த ஹெச்.ராஜா

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் நடிகர் சித்தார்த் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் ஒரு பதிவிட்டார்.

இந்திய மக்கள் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ஆனால். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு ஹீரோ போல் நடிப்பதையும் நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்.

இந்தியா முழுவதுமே பிஜேபியினர் சித்தார்த்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்

பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜாவும் இந்த நிகழ்வு குறித்து சித்தார்த்தை கண்டித்து டுவிட் இட்டுள்ளார்.

அதில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பபட்டனர், காயமடைந்தனர். அப்போது விமானப்படை தாக்குதல் நடத்த அனுமதி கேட்ட போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை.

ஆனால் மோடி அரசு நமது படையினருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top