முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்த முன்னணி பேட்ஸ்மேன்: இங்கிலாந்து vs மே.இ.தீவுகள் 3வது டெஸ்ட்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சிப்லே மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் களமிறங்கினர். மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் ரோச் வீசிய முதல் ஓவரை எதிர் நோக்கிய சிப்லே, முதல் ஓவரின் ஆறாவது வயதிலேயே அவர் தனது விக்கெட்டை இழந்தார். எல்பிடபிள்யூ முறையில் அவர்கிட்ட ஏதும் எடுக்காமல் அவு ஆனதால் இங்கிலாந்து அணி அதிர்ச்சி அடைந்தது

இந்த நிலையில் தற்போது கேப்டன் ரூட் 5 ரன்களுடனும் பர்ன்ஸ் 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் இங்கிலாந்து அணி சற்று முன் வரை 13 ஓவர்கள் விளையாடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக இரு அணிகளும் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்து உள்ளன என்பதும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் 1:1 என்ற புள்ளி கணக்கில் தற்போது இரு அணிகளும் சம நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் அணியே இந்த தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது