விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா-ஜோதிகா மகள்?

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் 'வர்மா' என்ற படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்தபோதிலும் இன்னும் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

dhruv

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் ‘வர்மா’ என்ற படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்தபோதிலும் இன்னும் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் துருவ் ஜோடியாக ஸ்ரேயா சர்மா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இவர் சூர்யா, ஜோதிகாவின் மகளாக ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

shareya sharmaஅர்ஜூன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் திரைக்கதை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பதாகவும், அர்ஜூன் ரெட்டி’ படத்திற்கும் ‘வர்மா’ படத்திற்கு பெரும் வித்தியாசம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

துருவ், ஸ்ரேயா சர்மா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறும் என்றும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.