Connect with us

அட்லி படத்தில் ஷாருக்கான்- அட்லியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

பொழுதுபோக்கு

அட்லி படத்தில் ஷாருக்கான்- அட்லியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

சமீபத்தில் இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்றும் தற்போது இயக்கி வரும் தளபதி 63 படத்திலேயே விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் ஷாருக்கானும் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இது எதுவுமே அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில் இப்போது அட்லியின் அடுத்த படத்தில்தான் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது வதந்தியா அல்லது உண்மையா என போக போகத்தான் தெரியும் இருப்பினும் சென்னையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண ஷாருக்கான் வந்திருந்தார்.

அவருடன் இணைந்து இயக்குனர் அட்லியும் பார்க்க வந்திருந்தது. ஷாருக்கான் அட்லி படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்கிறது.

இன்னொரு பக்கம் அட்லி கருப்பு டீசர்ட் போட்டு கொல்கத்தா அணிக்கு ஆதரவு போல உட்கார்ந்திருப்பதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். ஆளப்போறான் தமிழன்னு பாட்ட போட்டு ஓப்பனிங் சீன் வைத்துவிட்டு, பட வாய்ப்புக்காக கொல்கத்தா அணிக்கு ஆதரவு போல அட்லி உட்கார்ந்திருப்பதை விமர்சனம் செய்து வருகின்றனர்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top