Connect with us

ஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மும்பை சென்ற ஷாலினி அஜித்

செய்திகள்

ஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மும்பை சென்ற ஷாலினி அஜித்

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை திடீரென மரணம் அடைந்த எதிர்பாராத சம்பவம் தமிழ்த்திரையுலகை மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துவிட்டது. ஸ்ரீதேவி மறைவிற்கு கமல், ரஜினி உள்பட அனைத்து நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அஜித்தின் மனைவி ஷாலினி மும்பை சென்றுள்ளார். அஜித்தும் ஸ்ரீதேவியும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாக இருவரும் குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர்

குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை அஜித்தும், ஷாலினியும் ஸ்ரீதேவியிடம் போனில் பேசிக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேவி மரணம் குறித்து அஜித் எவ்வித அறிக்கையும் விடவில்லை என்றாலும் அவரது மரணம் அஜித்தை ரொம்பவே பாதித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top