வனிதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் – நடிகர் விஜயகுமார்

2 திருமணம் செய்து மூன்று கணவன்களுடன் வாழ்ந்து 3 குழந்தைகள் பெற்ற பிறகும் தனது மகளையே வனிதா கடத்தியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. 

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் இந்த வனிதா. விஜயகுமாரின் வாரிசாக முதல் முறையாக சினிமாவில் நடிக்க வந்தவரும் இவர் தான். 22 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர். சினிமாவில் இருந்து ஒதுங்கி 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். 

வனிதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் – நடிகர் விஜயகுமார்


இந்த திருமணத்தின் மூலமாக வனிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தன. ஒருஆண், ஒரு பெண் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2005ம் ஆண்டு வனிதா ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்றார். ஆனால் மூத்த மகன் மட்டும் தாத்தா மற்றும் தந்தையின் அரவணைப்பில் இருந்தார். 

பிறகு 2007ம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார் வனிதா. ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபரான இவரை திருமணம் செய்த பிறகு தான் வனிதாவிற்கு பிரச்சனை உருவானது. 

தனது முதல் மகன் மூலமாகத்தான் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியும் என்பதால் தனது முதல் கணவரின்அரவணைப்பில் இருக்கும் மகனை கேட்டு மிகப்பெரிய பிரளயத்தையே நடத்தினார். ஆனால் கடைசியில் அந்த மகன் வனிதாவுடன் வர முடியாது என்று கூறிவிட்டார். தனது முதல் கணவன் மூலமாக பிறந்த 2வது மகள் மற்றும் 2வது கணவன் மூலமாக பிறந்த பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். 

காரணமாக அவர்கள் கூறுவது வனிதா விஜயகுமார் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது. அவரின் ஒரே குறி பணம் தான். விஜயகுமார் குடும்பத்தினருக்கு வனிதா பிக்பாஸ் வீட்டில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம். தங்கள் பெயரையும் அவர் கெடுத்து விடுவார் என்று பயந்து வருகிறார்கள்.