ரி என்ட்ரி கொடுக்க என்னை அனுப்புங்கள் – காஜல் பசுபதி

கவின் தன்னுடன் நெருக்கம் கொண்டு நட்பு கொண்டதால் சாக்‌ஷி அகர்வால், அவர் மீது காதல் கொண்டார். ஆனால் ஆரம்பத்தில் சாக்‌ஷியிடம் நெருங்கிப் பழகி காதலை வெளிப்படுத்திய கவின் சில நாட்களுக்குப்பின் லோஸ்லியாவிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினார். 

லோஸ்லியா விலகிச் சென்றாலும் தானே சென்று வழியப் பேசிக் கொண்டிருப்பார் கவின். இதை கவனித்த சாக்‌ஷி, லோஸ்லியாவுக்கு எதிராக மாறினார். அந்த கோபம் கவினையும் பாதிக்க, இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. லோஸ்லியாவும் இதனால் மனம் வருந்தினார். 

ரி என்ட்ரி கொடுக்க என்னை அனுப்புங்கள் - காஜல் பசுபதி

கடந்த வாரம் முழுக்க கவின், சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா தான் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சிக்கு தீனி போட்டனர்.


இந்நிலையில், நடிகையும் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளருமான காஜல் பசுபதி சாக்‌ஷி பற்றிய பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். சாக்‌ஷியை விஷம் என்று குறிப்பிட்டதுடன், மற்றவர்கள் யாராவது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால், நல்லவர் என்று நினைத்துக்கொண்டிருக்கும் சாக்‌ஷி உண்மையில் ஒரு பாம்பு, விஷம் என்று புரியவையுங்கள்.

அதுதவிர, 2011ம் ஆண்டில் திருமணமாகி விவகாரத்தானதைப் பற்றி சாக்‌ஷி ஏன் பேசவில்லை என்பதையும் கேளுங்கள் என கூறியுள்ளார்.


இல்லையேல் தயவு செய்து என்னை ரீ என்ட்ரியாக ஒரு வாரத்திற்கு அனுப்புங்கள் என்று பதிவிட்டுள்ளார்.