லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்த சீமான்

நடிகரும் இயக்குனர் தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் நீண்ட நாட்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தான் செய்து வரும் சமூகப்பணிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வருவதாக மறைமுகமாக நாம் தமிழர் கட்சியை விமர்சித்து ஒரு அறிக்கையை நேற்று தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியிட்டார் லாரன்ஸ்.

நீங்கள் என்னைத் தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரிகமாகப் பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல், உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும்  நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்.

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால், மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும்  என்னால் தாங்கிக்கொள்ள முடியாது”.என லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சீமான் தம்பி லாரன்ஸ் சொன்னபடி செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் சமூக சேவையில் நான் மரியாதை வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

என் பெயரில் கட்சி பெயரில் தவறான நபர்கள் சமூக வலைதளங்களில் இயங்குகின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் கூறியுள்ளார்.