செகண்ட் லுக் போஸ்டரில் சூப்பர் டீலக்ஸ்- மார்ச் 29ல் வெளியீடு

ஆரண்ய காண்டம் என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. யுவனின் பின்னணி இசை மற்றும் படத்தின் வித்தியாசமான கதையால் அனைவரையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் வந்து பல ஆண்டுகள் ஆகியும் நீண்ட வருடம் கழித்தே இவர் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார்.

வித்தியாச வேடங்களை ஏற்கும் நடிகர் என்ற பெயர் பெற்ற விஜய் சேதுபதி இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார்.யுவன் இசையமைக்கிறார்.

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் மார்ச் 29ல் படம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது