காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட பள்ளி மாணவி

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி ஒருவரை கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் கொளுத்திய நிலையில், அந்த மாணவி சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 14 வயது பள்ளி மாணவி சித்ராதேவி ஒருவரை தன்னை காதலிக்கும்படி தனியார் மில் தொழிலாளி பாலமுருகன் என்பவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சித்ராதேவி மறுக்கவே ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்.

இதனால் படுகாயம் அடைந்த சித்ராதேவி, மதுரை மருத்துவமனையில் கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் சிறைச் சென்று ஜாமீனில் வெளிவந்த பாலமுருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.