Connect with us

நான் ஆன்ட்டி அமெரிக்கன் – சத்யராஜ் நக்கல் பேச்சு

பொழுதுபோக்கு

நான் ஆன்ட்டி அமெரிக்கன் – சத்யராஜ் நக்கல் பேச்சு

சென்னையில் பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில் தொல் திருமாவளவன், ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

இந்த விழா நடக்கும் இந்த நாளில்தான் அமெரிக்காவின் கடவுள் மறுப்பாளர், புரட்சியாளர் இங்கர்சால் பிறந்த நாள் ஆகும்.

இங்கர்சாலுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எனக்கு பயம் கடவுள் மறுப்பாளர்கள், பழமையை எதிர்ப்பவர்கள், பகுத்தறிவாளர்களைப் பாராட்டும்போது என்னை ‘ஆன்ட்டி அமெரிக்கன்’ என சொல்லிவிட்டால் என்ன செய்வது?

ஏனென்றால் இங்கு பெரியாரியவாதி என்றால், ‘ஆன்ட்டி இந்தியன்’ என சொல்லி விடுகிறார்கள். அதேபோன்று இங்கர்சாலைப் புகழ்ந்தால் ‘ஆன்ட்டி அமெரிக்கன்’ என சொல்லிவிட்டால் நான் எங்கு போவது? அது பெரிய பிரச்சினையாகிவிடும் என நினைத்தேன்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top