ஒத்த செருப்பு வசனம் பாராட்டிய சத்யராஜ்

புதிய பாதையில் ஆரம்பித்து தொடக்கம் முதலே வெற்றிப்படங்களையும் விருதுப்படங்களையும் இயக்கி வருபவர் ஆர் பார்த்திபன். இவரின் குடைக்குள் மழை, பச்சக்குதிர போன்ற படங்கள் எல்லாம் மிக வித்தியாசமான படங்களாகும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை இயக்கிய பார்த்திபன் கடந்த கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேல் படம் இயக்காத நிலையில் தற்போது ஒத்த செருப்பு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டீசரை சமீபத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்தை சத்யராஜ் வெகுவாக பாராட்டினாராம். பிறக்கும்போது எல்லாரும் அம்மணமாதான பொறக்கணும் சிலர் மட்டும் ஏன் கோவணத்தோட பொறக்கணும் சிலர் கோடீஸ்வரனா பொறக்கணும் என்ற வசனத்தை சத்யராஜ் மிக சிலாகித்து நீண்ட நேரம் பார்த்திபனிடம் பேசினாராம் .