Connect with us

வட்டாட்சியர் வளையத்திற்குள் சாத்தான்குளம் காவல்நிலையம்: பெரும் பரபரப்பு

செய்திகள்

வட்டாட்சியர் வளையத்திற்குள் சாத்தான்குளம் காவல்நிலையம்: பெரும் பரபரப்பு

சாத்தன்குளத்தில் தந்தை-மகன் வியாபாரிகள் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்த விசாரணைக்கு சாத்தான்குளம் காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து சாத்தான்குளம் காவல்நிலையம், அம்மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டுக்கு வரும் என நேற்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கலெக்டர் கட்டுப்பாட்டிற்குள் காவல் நிலையம் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது வட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் சாத்தான்குளம் காவல்நிலையம் வட்டாட்சியர் வளையத்திற்குள் வந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

ஏற்கனவே நீதிபதியை ஒருமையில் பேசியதாக ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும், சாத்தான்குளம் காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்று காலை ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி ஆணையால் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top