Connect with us

கலெக்டரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சாத்தான்குளம் காவல் நிலையம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செய்திகள்

கலெக்டரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சாத்தான்குளம் காவல் நிலையம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாத்தான்குளத்தில் சமீபத்தில் தந்தை மகன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த வழக்கை விசாரணை செய்வதில் சாத்தான்குளத்தில் உள்ள காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது

இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காவல் நிலையத்திலும் தடயங்கள் ஆதாரங்கள் சேகரிப்பதில் கோவில்பட்டி ஜே.எம்.க்கு உதவ நிபுணர்களின் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் தடய அறிவியல் கூடுதல் இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த வழக்கு விரைவில் சிபிஐக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது

Continue Reading
To Top