Connect with us

சாத்தான்குளம் சம்பவம்: பிரேத பரிசோதனை மையத்திற்கு வந்த நீதிபதி!

செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: பிரேத பரிசோதனை மையத்திற்கு வந்த நீதிபதி!

நேற்று சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவர் நடத்தி வந்த கடை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலும் திறந்து வைத்திருந்ததால் போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென இருவருக்கும் அடுத்தடுத்து மாரடைப்பு வந்து இறந்து விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது

ஆனால் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசார் அவர்கள் இருவரையும் அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்கள். இதனால் நேற்று சாத்தான்குளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது மரணமடைந்த இருவரின் உடல்களையும் 3 பேர் கொண்ட மருத்துவர் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யவேண்டுமென்றும் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட இரண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் அவர்கள் வருகை தந்துள்ளார். மருத்துவ கல்லூரி முதல்வருடன் அவர் ஆலோசனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து அவரிடம் போலீசார் விளக்கம் அளித்தபோது ஊரடங்கு விதிகளை இருவரும் மீறியதாகவும் அதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அதே நேரத்தில் போலீசார் அடித்து கொன்றதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் உயிரிழந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அதன் முடிவு விரைவில் வெளிவர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது இருவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் அவர்களே நேரடியாக வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top