Connect with us

நீதிமன்ற உத்தரவை அடுத்து மறுநாளே வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி: தீவிரமடையும் விசாரணை

செய்திகள்

நீதிமன்ற உத்தரவை அடுத்து மறுநாளே வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி: தீவிரமடையும் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவர் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடியாக ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்தது
அதில் இந்த வழக்கை சிபிஐ ஏற்கும் வரை தாமதம் செய்யாமல் அதுவரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கலாம் என்று யாருடைய ஆணைக்கும் காத்திராமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாளையே விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து சிபிசிஐடி போலீஸார் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து இன்று வழக்கு பதிவு செய்தனர். அரசு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சந்தேக மரணம் என சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இதனை அடுத்து தந்தை மகன் மரணம் விசாரணை தீவிரம் அடையும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விடிய விடிய அடித்ததாக மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் இன்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி அனில் குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இன்று மீண்டும் சென்று விசாரணை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top