Connect with us

ஆகஸ்ட் 14ல் சசிகலா ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள்

ஆகஸ்ட் 14ல் சசிகலா ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அவர் தற்போது பெங்களூர் பார்ப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தான் அவருடைய சிறைத்தண்டனை முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து இதுகுறித்து கர்நாடக சிறைத் துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக கூடியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலா பெயர் இல்லை என்பதால் ஆகஸ்ட் 14ல் சசிகலா ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது

எப்படி இருந்தாலும் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 2021 மே மாதம் தான் நடைபெறும். ஆனால் 2021 பிப்ரவரியிலேயே சசிகலா விடுதலையாகிவிடுவார் என்பதால் சசிகலா தலைமையிலான அதிமுக அணி தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
To Top