Connect with us

சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை

பொழுதுபோக்கு

சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை

சொல்லாமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சசி. வித்தியாசமான காதல் கதையை வித்தியாசமாக இயக்கி இருப்பார்.

அந்த படத்துக்கு பிறகு சில வருட இடைவேளை விட்ட சசி ரோஜாக்கூட்டம் படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு கட்டத்தில் நீண்ட இடைவேளை விட்ட சசி பூ படம் எடுத்தார். இது ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் 555 என்ற பரத் நடித்த வித்தியாசமானதொரு படம் எடுத்தார். போதிய வெற்றியை பெற தவறியது இப்படம். இருப்பினும் பரத்தின் கதாபாத்திரம் பேசப்பட்டது.

பின்பு பிச்சைக்காரன் படத்தில் தான் விட்ட இடத்தை மீண்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டார் சசி.

இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை என்றொரு படத்தை இவர் இயக்கி வருகிறார்.சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

Continue Reading
To Top