முதல் முறையாக கொந்தளிக்கும் சரவணன்..!

பிக்பாஸ் 3 உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது,  இன்றைய ப்ரோமோவில் நடிகர் சரவணன் சாண்டி மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் கோபமாகப் பேசுவதுபோல் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பரபரப்பு வந்துக்கொண்டே தான் உள்ளது. இதில் லொஸ்லியா, தர்ஷன், முகின், சரவணன் மட்டும் எந்த ஒரு பிரச்சனைகளிலும் மாட்டாமல் இருந்து வருகின்றனர்.

முதல் முறையாக கொந்தளிக்கும் சரவணன்..!

சரவணனை வைத்து முதல் முறையாக புரமோ வெளியிடப்பட்டிருப்பதை ரசிகர்கள் வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இவர் யாரிடமும் தேவையில்லாமல் பேச மாட்டார். குறிப்பாக பெண்களிடம் சரவணன் பேசுவது   என்பது கூட எப்போதாவதுதான் அப்படி இருக்கையில் யாருடன் தான் சண்டை போட்டிருப்பார் என்ற கேள்வி எழுகிறது.

சேரன் கூட பொதுவாக பிரச்சினைகளைப் பேசி வருகிறார், சரவணன் ஒன்றுமே சொல்வதும் கிடையாது, எதிலும் தலையிடுவது கிடையாது.

ஆனால், இன்றை டாஸ்கில் சரவணனுக்கு சித்தப்பா என்று உரிமையோடு பேசும் சாண்டி, முகின், தர்ஷன் என யாரும் உதவ முன்வரவில்லை.

இதனால், ‘இனி என் வேலையுண்டு என்று இருக்கப்போகிறேன், யாராவது பேசினால், அசிங்கப்பட்டு போவீர்கள்’ என கூறியுள்ளார்.

அப்படி என்னதான் நடந்தது? என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.