சசிகுமார் சரத்குமார் இணையும் புதிய படம்

90களில் முக்கிய ஹீரோவாய் இருந்தவர் சரத்குமார். ஒரு சில படங்களில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்து வரும் சரத்குமார். இப்போது அதிகம் ஹீரோவாக நடிப்பதில்லை. ஒரு காலத்தில் சரத்குமார் நடித்த சூர்ய வம்சம், நாட்டாமை, போன்ற படங்கள் அதிரடி ஆக்சனோடு, குடும்ப சித்திரங்களாகவும் வந்தன.

தற்போது வரும் படங்களில் சசிக்குமாரின் படங்கள் மட்டுமே அந்தக்கால சரத்குமாரின் படங்கள் போல வருகின்றன.

கிராமம், பாசம், குடும்பம் என அனைத்தும் கலந்து வருவது தற்போதைக்கு இவரின் படங்கள் மட்டும்தான்.

இப்போது சரத்குமாரும் சசிக்குமாரும் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்கள். சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

சசிக்குமார், சரத்குமார் முதல் முதலாக சேரும் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.