சப்த நாடிகளையும் சீராக்கும் காயகல்ப ஜூஸ்

சித்தர்கள், முனிவர்கள்லாம் மிகுந்த பொலிவுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர் என படித்திருப்போம். அவர்கள் அப்படி இருக்க காயகல்ப சாறினை குடித்து வந்ததே காரணம் என சித்த மருத்துவ நூல்கள் சொல்கிறது. இந்த சாறினை குடித்து வந்தால் சப்த நாடிகளையும் சீராக்கி ஒழுங்காய் இயங்க வைத்து தேகப்பொலிவுடனும், ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். இனி அந்த சாறை எப்படி செய்வது என பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்
பெருநெல்லி 1 
இஞ்சி 1 இன்ச் ( தோல் நீக்கியது)
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி 
எலுமிச்சம்பழ பாதி ( பொடியாக நறுக்கியது)
இளநீர் 1

செய்முறை

பெருநெல்லியை விதை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். . தோல் நீக்கிய இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பாதி எலுமிச்சம்பழத்தை நான்கு பாகங்களாக நறுக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது மிக்ஸியில் மேலே குறிப்பிடபட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக சாறாக அடித்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இந்த சாற்றில் இளநீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் பனங்கற்கண்டு அல்லது தேனை சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரையினை பயன்படுத்தக்கூடாது. தினமும் காலை 7:30 மணியளவில் இந்த பழச்சாறை எடுத்து கொண்டால் உடலில் மாற்றம் உண்டாவதை உணரலாம்.

சோம்பல் , இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம், இரத்த நீரழிவு , உடல் பருமன், உடல் சோர்வு , தலைவலி , உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இந்த ஜூஸை குடித்துவர நாள்பட நாள்பட முன்னேற்றம் காண்பது நிச்சயம்