நான் அனிருத்தை கலாய்க்கவில்லை-சாந்தனு விளக்கம்

பேட்ட படத்தில் மரணமாஸ் பாடலை பலரும் பாராட்டி வரும் நிலையில் பலர் கேலி, கிண்டல்கள், மீம்ஸ் என செய்து வருகின்றனர். இசையமைப்பாளர் கங்கை அமரன் கூட ஒரு கேலி மீம்ஸ் வெளியிட்டு இருந்தார்.

இசையமைப்பாளர் அனிருத் சீனியர் பாடகரான எஸ்.பி.பியின் போர்ஷனை குறைத்திருந்தார் என்பதே அனிருத் மீதான் குற்றச்சாட்டு.

பலரும் மீம்ஸ் வீடியோ வெளியிட்டனர். அனிருத் பற்றி சாந்தனு ஒரு மீம்ஸ் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.


இதில் ‘மரணமாஸ்’ பாடல் சிறிதளவும், அதனைத் தொடர்ந்து  ’அந்த 7 நாட்கள்’ படத்தில் அம்பிகாவைப் பார்த்து பாக்யராஜ் பாடும் ‘உனக்கும் எனக்குமே பொருத்தம்’ என்று பாடுவதும் இணைந்திருந்தது. இதனைப் பார்த்து தான் அனிருத் காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் இப்பதிவு அமைந்திருந்தது.

 இது சும்மா விளையாட்டுக்கே..” என்று  நடிகர் சாந்தனு ட்விட் செய்திருக்கிறார்.