சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!


சனிபகவான் தொல்லையிலிருந்து மீள எள்ளினை கருப்பு துணியில் முடிந்து, நல்லெண்ணெயில் ஊறவைத்து விளக்கேற்ற ஜோதிடர்கள் சொல்வார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. முதலில் எள்ளினை எரிக்கவே கூடாது.எள் ஒரு தானியம், தானியத்தினை யாரும் எரிப்பதில்லை.

அதுமட்டுமில்லாமல் சனி தொல்லையிலிருந்து விடுபட, 3,5,7,9.. எண்ணிக்கையிலான விளக்குகளை ஏற்றி, சனிபகவானை வீட்டிலியே வழிபடனும். எந்தைடத்தில் பிரச்சனையோ அந்த இடத்திலிருந்து வேண்டுவதே சரியானதாய் இருக்கும்.

சனி தொல்லையிலிருந்து விடுபட, வெளியில் செல்லும்போதெல்லாம் உலர் திராட்சையில் சிலதை வாயில் போட்டுக்கொண்டு செல்லலாம். இதுமட்டுமில்லாம காஞ்சி பெரியவர் 20 20 எளிய பரிகாரங்களை சொல்லி இருக்கார். அவை என்னவென்று தெரிஞ்சுக்கிட்டு அதுபடி செய்ங்க.

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2. சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைகளில் சாற்றி வணங்கி வழிபடவும்.

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

6. சனிக்கிழமைதோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடைமாலை அல்லது வெற்றிலைமாலை சாற்றி வழிபடனும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

11. கோமாதா பூஜை செய்யலாம்.

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்த து.

14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

இப்படிலாம் செஞ்சா சனிபகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews