Connect with us

மக்களின் மனம் கவர்ந்த சாண்டிக்கு இன்று பிறந்தநாள்!

பொழுதுபோக்கு

மக்களின் மனம் கவர்ந்த சாண்டிக்கு இன்று பிறந்தநாள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்து ஜூன் 23ம் தேதி தொடங்கியது, இரண்டாவது வாரத்தை நெருங்குவதற்குள் கேமிரா இருப்பதை மறந்து படுபயங்கரமாக சண்டைப் போட்டுக் கொள்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இரு அணிகளாக குரூப் உருவாக்கியுள்ளனர். அதில், அபிராமி, சாக்‌ஷி, ஷெரின், ரேஷ்மா, வனிதா, கவின், மோகன் வைத்யா ஆகியோர் ஒரு அணியாகவும், மதுமிதா, மீரா மிதுன் ஒரு அணியாகவும்,  சரவணன், சேரன், தர்ஷன், முகென் ராவ், லோஸ்லியா, சாண்டி, ஃபாத்திமா பாபு ஆகியோர் பொதுவாகவும் உள்ளனர்.

மக்களின் மனம் கவர்ந்த சாண்டிக்கு இன்று பிறந்தநாள்!

மதுமிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் மட்டுமே மற்ற போட்டியாளர்களுக்கு விரோதியாக இருப்பதுடன் தினமும் ஏதாவது ஒருவகையில் கார்னர் செய்யப்படுகின்றனர். 

இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்களில் ஒருவர் சாண்டி. மேலும் இரு அணிக்கும் பொதுவானவராக இருப்பதுடன், இதுவரை எந்தவிதமான மோசமான பெயரை எடுக்காமல் மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பவர்.

பிக் பாஸ் வீட்டில் தனது காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி. கடந்த 1986ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த இவர் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

 கடந்த 2017ம் ஆண்டு சாண்டி தோரதி சில்வியா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார் சாண்டி. இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இன்று இவரது கொண்டாட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாடப்படுமா? என்ற கேள்வியில் உள்ளனர் மக்கள்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top