சர்க்கார் பட பாணியில் ஓட்டளித்த நபர்

நடிகர் விஜய் நடித்த படம் சர்க்கார் இந்த படத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இந்தியாவுக்கு தனது வாக்கை செலுத்த வரும் விஜய்யின் ஓட்டு வேறொரு நபரால் கள்ள ஓட்டாக போடப்படுகிறது.

இதை எதிர்த்து தேர்தல் கமிஷன் வைத்துள்ள 49 பி என்ற செக்சனை பயன்படுத்தி அதை விளக்கி கேட்க தேர்தல் அதிகாரியும் அனுமதி கொடுக்கிறார்.

படத்திற்கான கற்பனை காட்சியாக அது இல்லாமல் 49 பி என்று ஒரு செக்சன் இருந்ததே அந்த படம் வந்த பின்னரே தெரிந்தது.

இது போல நெல்லை மாவட்டம் பணகுடியில் மணிகண்டன் என்ற வாலிபர் வாக்களிக்க செல்ல இது போல் வேறு ஒருவர் அவர் வாக்கை கள்ள ஓட்டாக செலுத்தி சென்றார். அவருக்கு திடீரென சர்க்கார் பட ஞாபகம் வர உடனே அதன் படி 49 பி செக்சனை குறித்து விளக்க தேர்தல் அதிகாரி அவருக்கு ஓட்டுப்போட அனுமதி அளித்தார்.