‘கைதி’ படத்துடன் கனெக்சன் ரெஜினா நடிக்கும் அடுத்த படம்


6db7355994ff2bfd5c09bc693f173bfb

கோலிவுட்டில் நடிகைகள் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே நயன்தாரா, த்ரிஷா, அமலா பால் உள்பட ஒரு சில நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் நடிகை ரெஜினா இணைந்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் நடிகை ரெஜினா டூப் இல்லாமல் இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தற்போது பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆப்பிள் ட்ரீஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்க தற்போது சாம் சிஎஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் வேதா, கைதி உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியத்துவம் பெறும் ஆக்சன் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews