சிறந்த மாநகராட்சி விருது பெற்ற முதல்வர் பிறந்த மண்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு விருதுகளையும் பரிசுத் தொகையையும் வழங்கி கௌரவிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று சிறந்து விளங்கும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வழங்கப்படும் விருதினைப் பெறப் போவது யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டு தகவல்களும் வெளியாகியுள்ளன.
 

சிறந்த மாநகராட்சி விருது பெற்ற முதல்வர் பிறந்த மண்!


2013 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த கௌரவிப்பானது, மாநகராட்சி, நகராட்சிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற விதத்திலேயே வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகளை பெறத் தேர்வாகியுள்ள சிறந்த மாநகராட்சி – சேலம்; சிறந்த நகராட்சிகள் – தருமபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி. 

சிறந்த நகராட்சியாக தேர்வானதற்கு, கலெக்டர் ரோகிணிதான் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது, ஆட்சிப்பணியில் இருக்கும் இவர்தான் இந்த மாநகராட்சி முன்னேற்றத்திற்கு காரணம் என தொலைக்காட்சிகளில் பாராட்டும் விதமாக குறும்படம் வெளியாகியுள்ளது.

சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம், சிறந்த மூன்று நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.