கனத்த இதயத்துடன் வெளியேறிய சாக்‌ஷி.!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.

டி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது.


வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல்  கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதன்பின்னர் கவினும், சாண்டியும் பிரியாவிடைப் பாடலை நாமினேட் ஆனவர்களுக்காகப் பாடினர்.

கனத்த இதயத்துடன் வெளியேறிய சாக்‌ஷி.!

அந்தப் பாடல் அனைவரையும் கலகலப்பாகியது, பின்னர் லோஸ்லியா காப்பாற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார்.

அதன்பின்னர் வெளியேற்றப்படுவது அபிராமியா? சாக்ஷியா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, சாக்ஷி வெளியேற ஆர்வம் இருப்பதாக தெரிவித்ததும், கமல் ஹாசன் அப்போ இங்க வாங்க சாக்ஷி என்று கார்டை காட்ட சாக்ஷி வெளியேற்றப்பட்டது உறுதியானது.

ஷெரின் இதனைக் கேட்டு அழ ஆரம்பித்ததும், அபிராமியும் அவரைத் தொடர்ந்து அழுதார். ஆனால் சாக்ஷி கடைசி வரை கண்ணீர் சிந்தவில்லை. கனத்த இதயத்துடனே வெளியேறினார்.